கடவுச்சீட்டுக்கான கட்டணங்கள் நாளை முதல் அதிகரிப்பு

(FASTNEWS|COLOMBO) – 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் படி கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ளும் போது அறவிடப்படுகின்ற கட்டணம் நாளை(01) முதல் அதிகரிக்கப்படுகின்றது.

சாதாரண சேவை கடவுச்சீட்டை பெறுவதற்காக இதுவரை அறவிடப்பட்ட 3000 ரூபா நாளை(01) முதல் 3500 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் கூறியுள்ளது.

ஒருநாள் சேவைக் கட்டணமாக இருந்த 10,000 ரூபா நாளை(01) முதல் 15,000 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது.

இதேவேளை, 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான விஷேட கடவுச்சீட்டுக்கு சாதாரண சேவையின் போது 2000 ரூபாவில் இருந்து 2500 ரூபாவாகவும், ஒருநாள் சேவையின் போது 5000 ரூபாவில் இருந்து 7500 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் கூறியுள்ளது.