இன்று முதல் கராச்சிக்கான பயணத்தை ஆரம்பிக்கும் ஸ்ரீலங்கன் விமான சேவை

(FASTNEWS|COLOMBO)  பாகிஸ்தானில் வர்த்தக தலைநகரான கராச்சிக்கான பயணத்தை இன்று மீண்டும் ஸ்ரீலங்கன் விமான சேவை ஆரம்பிக்கவிருக்கிறது.

வாரத்தில் ஐந்து நாட்களுக்கு இரு நாடுகளுக்கிடையிலான இந்த விமான சேவை இடம்பெறுகின்றன. செவ்வாய் வியாழன் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சேவைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானுக்கான பல்வேறு விமான சேவைகள் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி தற்காலிகமான இடை நிறுத்தப்பட்டன.