இராணுவ அதிகாரி போன்று செயற்பட்ட நபரொருவர் கைது

(FASTNEWS | COLOMBO)- இராணுவ அதிகாரி போன்று செயற்பட்ட முஹம்மட் நிசார் இம்ரான் (ஜோன் வோல்க்) எனும் நபர் காவற்துறை அதிரடி படையினால் இன்று(02) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மொரட்டுவ – சொய்சாபுரத்தில் வைத்து பொலிஸ் அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.