(FASTNEWS | COLOMBO)- 2019ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமைவாக ஓய்வூதியக்காரர்களின் சம்பளம் மறுசீரமைக்கப்பட உள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஏ.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
இந்த மறுசீரமைப்பு எதிர்வரும் ஜூலை மாதம் 1ம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும். இதற்கான சுற்றறிக்கைகள் அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஏ.ரத்னசிறியினால் நேற்று(01) அனைத்து அமைச்சின் செயலாளர்களுக்கும் மாகாண பிரதம செயலாளர்களுக்கும் மாவட்ட செயலாளர்களுக்கும் திணைக்களங்களின் தலைமை அதிகாரிகளுக்கும், பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.