களனி பல்கலைக்கழகத்தின் மூடப்பட்ட பீடங்கள் மீள ஆரம்பம்

(FASTNEWS | COLOMBO)- தற்காலிகமாக மூடப்பட்ட களனி பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்களும் இன்று(03) திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்படி, களனி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம், வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீடம், தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப பீடம் ஆகிய பீடங்களை திறக்கப்படவுள்ளன.

குறித்த பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மாணவர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தமையினால், களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பீடங்களும் கடந்த 30 ஆம் திகதி தற்காலிமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.