(FASTNEWS | COLOMBO) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக நாடளாவிய ரீதியாகவுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் தற்போதிலிருந்து மூடுமாறு மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன கலால் ஆணையாளரிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார்.
நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக குடிபோதையில் நடந்துகொள்வதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுக்க எச்சரிக்கையாக அமையும் என குறிப்பிட்டு ஆளுனரால் இன்று(03) கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.