இலங்கை போக்குவரத்து சபைக்கு குளிரூட்டப்பட்ட சொகுசு பேரூந்துகள்

இலங்கை போக்குவரத்து சபைக்கு குளிரூட்டப்பட்ட சொகுசு பேரூந்துகள்

(FASTNEWS|COLOMBO) – இலங்கை போக்குவரத்து சபைக்கு 68 குளிரூட்டப்பட்ட சொகுசு பேரூந்துகள் சேவையில் ஒன்றிணைப்பதற்கு இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன் முதன் கட்டத்தின் கீழ் சீனாவின் Xiamen Kinglong United Automotive Industry நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 9 சொகுசு நவீன பேரூந்துகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த இந்த பேரூந்துகள் எதிர்வரும் புதன்கிழமை சீனாவிலிருந்து இங்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது. இந்த பேரூந்துகளின் பெறுமதி 17.1 மில்லியன் ரூபாவாகும் என தெரிவிக்கப்படுகின்றன.

இதன் முதன் கட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட 9 பேரூந்துகள் மகரகம மத்திய பேரூந்து தரிப்பு நிலையம் கட்டுபெத்த, பொலன்னறுவை, மாவனெல்லை, மாத்தளை டிப்போக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.