(FASTNEWS|COLOMBO) – ரமழான் மாதம் இஸ்லாத்தின் மையக் கருத்தினையும் மானிட சமூகப் பெறுமானங்களையும் சிறப்பாக அறிந்து கொள்வதற்கான சிறந்த சந்தர்ப்பம் ஆகும். நீண்ட காலமாக இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் அந்த சமயப் பெறுமானங்களை முன்னிலைப்படுத்தி வாழ்ந்து வந்துள்ளதை நாம் அவதானித்துள்ளோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள ரமழான் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
