உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 20 கோடி ரூபா இழப்பீடு

(FASTNEWS|COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்காக சுமார் 20 கோடி ரூபா நிதி நட்டஈடாக வழங்கப்பட்டிருப்பதாக இழப்பீட்டுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த 174 பேரின் குடும்பங்களுக்காகவும், காயமடைந்த 248 பேருக்கும் நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட தேவாலயங்களை புனரமைப்பதற்காக 25 மில்லியன் ரூபா வழங்கப்பட்டிருப்பதாகவும் இழப்பீட்டிற்கான அலுவலகத்தின் பணிப்பாளர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.