(FASTNEWS | COLOMBO) – புதிய கூட்டமைப்பை கட்டியெழுப்புவது தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி ஆகியவற்றுக்கிடையேயான ஐந்தாம் கட்ட பேச்சுவார்தை இன்று(07) இடம்பெறவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
குறித்த இந்த பேச்சுவார்தை எதிர்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று(07) முற்பகல் 10.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, புதிய கூட்டமைப்பை கட்டியெழுப்புவது தொடர்பிலான திட்டம் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.