(FASTNEWS | COLOMBO) – நீர்கொழும்பு, ஏத்துகால பகுதியில் உள்ள வீடு ஒன்றை விசேட அதிரடிப்படையினர் இன்று (07) காலை சோதனையிட்டுள்ள நிலையில் குறித்த வீட்டில் இருந்து 402 ஐபோன், 17,400 சிம் காட்கள், 60 ரௌட்டர்கள் உட்பட சில தொடர்பாடல் உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த வீட்டில் தங்கியிருந்த 2 இலங்கையர்கள் மற்றும் சீன நாட்டவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு, கைது செய்யப்பட்ட சீன நாட்டவர் வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.