இன்று முதல் வீதியின் நிரல் சட்டம் அமுல்

(FASTNEWS|COLOMBO) – வாகன நெரிசல்களை மற்றும் வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் இன்று(10) முதல் பிரதான நகரங்களில் வீதியின் நிரல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

விஷேடமாக பயணிகள் போக்குவரத்து பேரூந்துகள் வீதியின் வலது பக்கத்தில் செல்ல வேண்டும். கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதான வீதிகளில் இந்த பேரூந்துகளுக்காக பிரதான வீதி நிரல் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த விஷேட வீதி நிரல் கொழும்பு, கல்கிசை வெளிக்கடை உள்ளிட்ட பகுதிகளில் இந்த முக்கிய வீதி நிரல் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுவாக வலது புறத்தில் பொது போக்குவரத்து பேரூந்துகள் செல்லும் நடைமுறை நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும்.