பொது பரீட்சைகளுக்கான சான்றிதழ்களை இணையம் மூலம் வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பம்

(FASTNEWS|COLOMBO) – கல்வி அமைச்சின் டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்றிட்டத்தின் கீழ், அரசாங்கத்தினால் நடத்தப்படும் பொது பரீட்சைகளின் சான்றிதழ்களை இணையத்தின் மூலமாக நேரடியாக வழங்கும் நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இதன் முதற்கட்டத்தின் கீழ் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர சான்றிதழ்கள் இணையத்தின் ஊடாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றன.

வங்கி கடன் அட்டைகள் மூலம் இதற்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ளலாம் என்றும் தபால் அலுவலங்களில் இந்த சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித மேலும் தெரிவித்தார்.