நாடு முழுவதும் காற்றுடன் கூடிய காலநிலை

(FASTNEWS|COLOMBO) – நாடு முழுவதும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் , தென் , மத்திய , சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்றைய தினம் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழைப் பெய்யக்கூடும் எனவும், அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் ஓரளவு மழை எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதேபோல், நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.