மூன்று விற்பனை நிலையங்கள் தீக்கிரை

(FASTNEWS|COLOMBO) – குருநாகலை – கடுபொத நகரில் நேற்றிரவு(10) விற்பனை நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் மூன்று விற்பனை நிலையங்கள் தீக்கிரையாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குருநாகலை நகர சபையின் தீயணைப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் பொலிசார் இணைந்து இந்த தீப்பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.