11 பாடசாலைகளுக்கு விடுமுறை

(FASTNEWS|COLOMBO) – பொசன் பண்டிகையை முன்னிட்டு நாளை மறுதினம்(13) முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை அனுராதபுரம், மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை பகுதிகளிலுள்ள 11 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமத்திய மாகாண கல்வி திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொசன் பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பிற பகுதிகளில் இருந்து பிரவேசிக்கும் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளை தங்க வைப்பதற்காகவே குறித்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.