வெளிநாடுகளில் வசிக்கின்ற இலங்கையர்களுக்கும் சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளை எழுத வாய்ப்பு

(FASTNEWS | COLOMBO) – எதிர்வரும் காலங்களில் வெளிநாடுகளில் வசிக்கின்ற இலங்கையர்களது பிள்ளைகள், கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளை அவர்கள் வசிக்கும் நாடுகளில் இருந்து எழுதுவதற்கான வசதிகளை ஏற்படுத்தும், பொறிமுறையை உருவாக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், பரீட்சைகள் திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி அவர்கள் வசிக்கின்ற நாடுகளில் உள்ள இலங்கையின் ராஜதந்திர அலுவலகத்தில் இந்த பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கான ஏற்பாட்டை மேற்கொள்ள தாம் அறிவுறுத்தி இருப்பதாக கல்வி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.