(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவின் தற்போதைய இலக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் பாராளுமன்ற தெரிவுக் குழுவில் இது தொடர்பில் எவ்வாறு சாட்சிகளை விசாரிக்க முடியும் என குறித்த கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.
குறித்த குழு முன்னிலையில் பாதுகாப்பு சபையில் உள்ள அனைவரையும் அனைத்து அரச புலனாய்வு சேவைக்கு பாரிய சிக்கல்களை எழுப்பியுள்ளதாக நேற்று(11) கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.