(FASTGOSSIP | COLOMBO) – பாராளுமன்ற தெரிவுக் குழுவை இரத்துச் செய்ய ஜனாதிபதி வலியுறுத்தி வரும் நிலையில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் இலங்கக்கோன், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து விசாரிக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினராவார்.
ஆகவே தான் நியமித்த குழுவின் உறுப்பினர் ஒருவரை தெரிவுக்குழு விசாரணைகளுக்கு அழைத்திருப்பது ஜனாதிபதிக்கு மேலும் விசனத்தை ஏற்படுத்தக் கூடுமென அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெரிவுக்குழு அறிக்கையினை நேற்று(11) ஜனாதிபதியிடம் கையளித்துள்ள நிலையில் எந்த அடிப்படையில் எப்படியான விசாரணைகளை மேற்கொண்டது என்பதை கேட்பதற்காகவே இலங்ககோன் பாராளுமன்ற தெரிவுக்குழு முன் அழைக்கப்படவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாராளுமன்ற தெரிவுக் குழுவின் நடவடிக்கைகளை நிறுத்துமாறும் அவ்வாறு நிறுத்தாவிடின் தான் தொடர்ச்சியாக அமைச்சரவை மற்றும் அரச நிகழ்வுகளை புறக்கணிப்பதாக ஜனாதிபதி இறுதியாக இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்திருந்த நிலையில், கடந்த அமைச்சரவைக் கூட்டம் இரத்து செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.