காவல்துறையிரை தாக்கிய சந்தேக நபர்கள் கைது

மாத்தறை, வெலிகம பிரதேசத்தில் காவல்துறையிரை தாக்கிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கூரிய வாள்களினால் மேற்கொண்ட தாக்குதலில் இரண்டு காவல்துறை  உத்தியோகத்தர்கள் படுகாயமடைந்தனர்.

இந்த சம்வத்துடன் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்களிடமிருந்து கைக்குண்டுகள் மற்றும் கூரிய ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்