டுபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள ஐவர்

(FASTNEWS|COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மொஹமட் மில்ஹான் உள்ளிட்ட 05 சந்தேகநபர்கள் டுபாயில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இன்று அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.