கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் கடும் மழை

(FASTNEWS | COLOMBO) – நாட்டின் வட அரைப்பகுதியில் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமையும் நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் கடும் மழையுடன் கூடிய நிலைமை சற்று அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன் காரணமாகவே கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் தற்போது கடுமையான மழை பெய்து வருவதாகவும், மேல்,தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வட மேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படும் என்றும் குறித்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

கடும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பொதுமக்கள் இடி மற்றும் மின்னல் தாக்குதல்களில் இருந்து அவதானத்துடன் செயற்படுமாறும் மேலும் கோரப்பட்டுள்ளது.