ஜெப்ரி அலோசியஸ் இற்கு வெளிநாடு செல்ல அனுமதி

(FASTNEWS | COLOMBO) – மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெயரிடப்பட்டுள்ள பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன தலைவர் ஜெப்ரி அலோசியஸ் எதிர்வரும் ஜூலை மாதம் 01ம் திகதி முதல் 11ம் திகதி வரை சிங்கப்பூர் செல்வதற்கு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் நேற்று(13) அனுமதி வழங்கியுள்ளது.