ராவணா-வன் திங்களன்று விண்ணுக்கு ஏவப்படுகிறது

(FASTNEWS|COLOMBO) – இலங்கையின் முதலாவது செய்மதி, எதிர்வரும் திங்கட்கிழமை(17) விண்ணுக்கு ஏவப்படவுள்ளது.

இலங்கை தொழில்நுட்பவியலாளர்களால் நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது செய்மதியாக இது கருதப்படுவதாக, ஆதர் சீ கிளார் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அது புவியில் இருந்து 400Km தூரத்திலுள்ள விண்ணுக்கு, இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு விண்ணுக்கு செலுத்தப்படவுள்ளது.

ஜப்பானின் தொழில்நுட்ப உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட இதற்கு, ராவணா-வன் என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.