பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவுக்கு காத்தாங்குடி பொலிஸ் நிலைய அதிகாரிக்கும் அழைப்பு

(FASTNEWS | COLOMBO) – எதிர்வரும் 18ம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு முன்னிலையில் காத்தாங்குடி பொலிஸ் நிலைய அதிகாரி, முன்னாள் பொலிஸ் நிலைய அதிகாரி மற்றும் முஸ்லிம் ‘சூபி’ எனப்படும் பிரிவினரை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமை உள்ளிட்டோரை சாட்சியம் வழங்க அழைக்கப்பட்டுள்ளதாக குறித்த குழுவின் தலைவர், பிரதி சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்திருந்தார்.

அதன்படி, பாராளுமன்ற தெரிவுக் குழுவின் காலத்தினை தொடர்ந்தும் நீடிக்காது உரிய காரணங்களை கருத்திற் கொண்டும் எவ்வித தடைகள் ஏற்படினும் குழுவின் சாட்சியங்கள் பெறுவதை இரத்து செய்து தொடர்ந்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.