(FASTNEWS|COLOMBO)- பீகார் மாநிலத்தில் சுட்டெரிக்கும் கடுமையான வெயில் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் 100 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் அதிகபட்சமாக அவுரங்காபாத் மாவட்டத்தில் மட்டும் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கயா மாவட்டத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே, பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார், வெயிலுக்கு உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு மாநில அரசு சார்பில் தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.