நாடளாவிய ரீதியில் பொதியிடும் தொழில்நுட்பத்தை மேம்படுத்த திட்டம்

நாடளாவிய ரீதியில் பொதியிடும் தொழில்நுட்பத்தை மேம்படுத்த திட்டம்

(FASTNEWS|COLOMBO)- நாடளாவிய ரீதியில் பொதியிடும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் நோக்கில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு நிதி ஊக்குவிப்புக்களை வழங்குவதற்கு வர்த்தக கைத்தொழில் அமைச்சு வேலைத் திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.

முதற் கட்டமாக கிழக்கு, வடக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குறித்த இந்த வேலைத் திட்டத்தின் மூலம், இம்மாகாணங்களில் உணவு பொதியிடுவோருக்கு ஆகக்கூடியது ஒரு இலட்சம் ரூபா நிதி உதவி ஊக்குவிப்பாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.