(FASTNEWS | COLOMBO) – முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாய ராஜபக்ஷ ஒரு வலுவான தலைவராக இருந்தாலும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான சிறந்த வேட்பாளர் அல்ல என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார்.
“சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள், தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனவே அதிபர் வேட்பாளராகப் போட்டியிட மிகவும் பொருத்தமானவர் என்று, பலமாக நம்புகின்றனர்.
19 ஆவது திருத்தச் சட்டத்தினால், கட்டுப்படுத்தப்படுவதால், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியானாலும் கூட, அவரால் நடவடிக்கைகளை எடுக்க முடியாது.
மேலும் ஸ்ரீ லங்கா பொது ஜன முன்னணியினால் போதிய வாக்குகளை திரட்ட முடியவில்லை.
பொதுஜன முன்னணியுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சிறிய முரண்பாடுகள் இருந்தாலும் அதனை தீர்த்து, இணைந்து செயற்பட முடியும்.
ஜனாதிபதி பதவிக்கு, மைத்திரிபால சிறிசேனவை முன்னிறுத்த முடியும். பிரதமர் பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷவை முன்னிறுத்தலாம்” என்றும் அவர் தெரிவித்தார்.