2020ம் ஜனாதிபதி தேர்தலின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி புதிய நிலைப்பாட்டில்

(FASTNEWS | COLOMBO) – எதிர்வரும் 2020ம் ஜனாதிபதி தேர்தலின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் அநீதி இழைக்காத வகையில் புதிய தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று (19) முற்பகல் கொழும்பு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மகளிர் முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

“..ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சிதரும் வகையில் வலுவான அரசியல் வேலைத்திட்டத்தின் ஊடாக கட்சியை முன்னெடுத்து செல்ல நவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

நாட்டின் பொதுமக்கள் மற்றும் தாய்மாரின் கட்சியாக கருதப்படும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வலுவூட்டும் செயற்பாடுகளின் போது பெண் பிரதிநிதிகளுக்கு விசேட கடமைகள் வழங்கப்படுவதுடன், நிகழ்கால சமூக சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு நல்லதோர் சமூகத்தினையும் நாட்டையும் கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பு வழங்குவது அவர்களது கடமையாகும்..” என தெரிவித்திருந்தார்.