புறக்கோட்டை மெனிங் சந்தை அடுத்த வருடம் பேலியாகொடையில்

(FASTNEWS|COLOMBO) – கொழும்பு – புறக்கோட்டை மெனிங் சந்தை அடுத்த வருடம் பேலியாகொடை பிரதேசத்தில் முழுமையாக அமைக்கப்படும் என மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்துக்கான பெயரை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் என மாற்றுவதற்கான பிரேரணை மீதான விவாதம் நடைபெற்றது.

மொத்த வியாபார நிறுவனங்கள் அனைத்தும் அங்கு கொண்டு செல்லப்படுவதாகவும், இதற்கான கட்டிட வசதிகள் தற்பொழுது பேலியாகொடையில் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.