(FASTNEWS|COLOMBO) – இன்று(20) ரயில் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டால், 800 மேலதிக பேருந்து சேவைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
சம்பளப் பிரச்சினை தீர்க்கப்படாதுள்ளமைக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தொடர்ந்து பணியாளர்களது தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
ரயில் தொழிற்சங்களின் பிரதிநிதிகளுக்கும் நிதி அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளதுடன், குறித்த இந்த சந்திப்பில் தீர்வு வழங்கப்படாவிட்டால், பிற்பகல் 2 மணிக்கு பின்னர் திட்டமிட்டபடி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவிருப்பதாக ரயில் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.