பேச்சுவார்த்தை தோல்வி – இன்று நள்ளிரவு ரயில் பணிப்புறக்கணிப்பில்

(FASTNEWS|COLOMBO) – புகையிரத தொழிற்சங்கம் இன்று(20) நள்ளிரவு முதல் இரண்டு நாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.

இன்று(20) பிற்பகல் நிதியமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில் தொழிற்சங்கம் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

புகையிரத சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சில இன்று(20) நள்ளிரவு முதல் 48 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.