(FASTNEWS|COLOMBO) – ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக சுமார் 45 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சுமார் 10 ரயில் சேவைகள் இன்று(21) பணியில் ஈடுபட்டதாக ரயில் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட கூறியுள்ளார்.
சில கோரிக்கைகளை முன்வைத்து நேற்று(20) நள்ளிரவு முதல் ரயில் ஊழியர்களின் தொழிற்சங்க உறுப்பினர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.