ரயில் பணிப்புறக்கணிப்பு – விஷேட போக்குவரத்து சேவைகள்

(FASTNEWS|COLOMBO) – ரயில்வே திணைக்கள தொழிற்சங்கங்கள் சில நேற்று(20) நள்ளிரவு முதல் முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக சிரமங்களுக்கு உள்ளாகும் பொது மக்களின் சிரமத்தை குறைப்பதற்காக விஷேட பேரூந்து சேவை நடைபெறுவதாக தேசிய போக்குவரத்து சபையின் சேவைப் பிரிவில் பிரதி பொது முகாமையாளர் பி.எச்.ஆர்.டி. சந்திரசிறி தெரிவித்தார்.

மேலும், பயணிகளின் வசதி கருதி விஷேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.