அமெரிக்க ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்

(FASTNEWS|COLOMBO) – ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஹார்மோஸ் ஜலசந்தி மேல் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அது ஈரானிய எல்லைக்குள் குமோபாரக் அருகில் பறந்ததால் சுட்டு வீழ்த்தியதாக இரானிய பாதுகாவலர்கள் கூறுகின்றனர்.

இதனால அமெரிக்காவுக்கும் இரானுக்கும் நடுவில் தற்போது பதற்றம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.