(FASTGOSSIP|COLOMBO) – உலகக் கோப்பை தொடரில் இன்று(21) ஹெடிங்லி மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் இங்கிலாந்து-இலங்கை அணிகள் மோதவுள்ளன.
இங்கிலாந்து மிகச்சிறந்த அணி அவர்களிடம் சிறந்த துடுப்பாட்ட வரிசையிலுள்ளது இந்நிலையில், நாங்கள் அவர்களின் துடுப்பாட்ட வீரர்களிற்கு எதிராக சில திட்டங்களை வகுத்துள்ளோம் என அணியின் தலைவர் திமுத் கருணாரட்ண தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெறவுள்ள போட்டியில் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்களை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை அணி வழமைக்கு மாறான தந்திரோபாயங்களை பயன்படுத்த எண்ணியுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியை 300 ஓட்டங்களிற்குள் கட்டுப்படுத்துவதே ஆரம்பகட்ட இலக்கு என திமுத் கருணாரட்ண தெரிவித்துள்ளார்.