தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து – 30 பேர் உயிரிழப்பு

(FASTNEWS|COLOMBO)- இந்தோனேசியா நாட்டின் வடக்கு சுமத்ரா பகுதியில் நேற்று தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 30 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தொழிற்சாலையில் வழக்கம்போல் தயாரிப்பு பணிகள் நடைபெற்றுவந்த நிலையில் திடீரென்று ஏற்பட்ட பயங்கரமான வெடிச்சத்தத்தை தொடர்ந்து குவித்து வைக்கப்பட்டிருந்த தீப்பெட்டிகள் அனைத்தும்  வெடித்து சிதறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீ இந்த விபத்தில் சிக்கி உடல் கருகி குழந்தைகள் உட்பட 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.