(FASTNEWS|COLOMBO) 2019 உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் நேற்று சவுதம்டனில் இந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி 11 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.
மேற்படி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 224 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் விராட் கோலி அதிகூடுதலாக 67 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
அதையடுத்து, 225 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 49.5 ஓவர்களில் 213 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.