
இ.போ.சபையின் உயர் தரத்திலான புதிய பேரூந்துகள் எதிர்வரும் 27 முதல் சேவையில்
(FASTNEWS|COLOMBO) – இலங்கைக்கு தருவிக்கப்பட்ட உயர் தரத்திலான பேரூந்துகள் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் பொது மக்களின் போக்குவரத்து சேவைக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
தற்போது ஒன்பது பேரூந்துகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன் 37 பேரூந்துகள் இலங்கைக்கு தருவிக்கப்படவுள்ளன.
இதன்படி, கட்டுபெத்த, மஹரகம, பொலன்னறுவை, மாத்தளை பேரூந்து சேவை நிலையங்களில் இந்த பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.