களுத்துறை மாவட்ட அரசாங்க வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்

(FASTNEWS|COLOMBO) – களுத்துறை மாவட்ட அரசாங்க வைத்தியர்கள் இன்று(24) மதியம் 12 மணி முதல் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று காலை களுத்துறை வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்ட சுகாதார அமைச்சருக்கு எதிரான பொதுமக்களின் கையொழுத்தை பெற்றுக் கொள்ளும் நிகழ்விற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தமை காரணமாக இவ்வாறு அடையாள வேலை நிறுதத்தில் ஈடுபட்டுள்ளனர்.