(FASTNEWS|COLOMBO) – தற்பொழுது நிலவும் வரட்சியுடனான காலநிலை காரணமாக 4 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வரட்சியினால் வட மாகாணம் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் குறித்த இந்த பிரதேசத்தில் பொது மக்களுக்கான குடி நீர் விநியோகத்திற்கான நடவடிக்கை முன்னெடுத்திருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
பிரதேசத்தில் உள்ள இடர் முகாமைத்துவ அலுவலகம் மற்றும் பிரதேச மற்றும் மாவட்ட செயலகங்கள் ஊடாக இந்த பணி முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பல மாவட்டங்களில் 1,23,771 குடும்பங்களைச் சேர்ந்த 4,50,160 பேர் மொத்தமாக வரட்சியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களாகும் என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.