இந்தியாவின் புலனாய்வுப் பிரிவுடன் கைகோர்க்கத் தயார்

(FASTGOSSIP | COLOMBO)- ஐ.எஸ் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக நடவடிக்கை​களை முன்னெடுத்து வரும் , இந்தியப் புலனாய்வு பிரிவுடன் ஒருங்கிணைந்து செயற்படுவதாக, இராணுவத் தளபதி ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

மாதுரு​ஓயா இராணுவ முகாமில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எந்தவொரு நாட்டிலும் எந்தவொரு காலப்பகுதியிலும் இவ்வாறான நெருக்கடிகள் ஏற்படலாம். எனினும் புலனாய்வு நடவடிக்கைகள் தொடர்பில் இந்தியாவுடன் ஒருங்கிணைந்து செயற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.