(FASTNEWS| COLOMBO)- அநுராதபுரம் மாநகர சபையின் தலைவர் உள்ளிட்ட 08 பேரையும் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திம்புத்தேகம நீதிவான் நீதிமன்றம் இன்று(24) உத்தரவு பிறப்பித்துள்ளது.
அநுராதபுரம் உணவு மற்றும் மருந்தக பரிசோதகராக கடமையாற்றி வந்த ஆனந்த வேரகொடகேவின் வீட்டிற்கு கடந்த 1999 ஆம் ஆண்டு கைக்குண்டு தாக்குதல் நடத்தினார்கள் என தெரிவித்து அநுராதபுரம் மாநகர சபையின் தலைவர், தலாவ பிரதேச சபையின் தலைவர், ராஜாங்கனை பிரதேச சபையின் உப தலைவர் ஆகியோர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடதக்கது.