நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை பெய்யக் கூடும்

(FASTNEWS|COLOMBO)- நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கும் காலி மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன் பதுளை மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழைபெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.