நாளை(26) 24 மணித்தியால நீர் விநியோகம் தடை

(FASTNEWS|COLOMBO)- நாளை(26) காலை 09 மணி முதல் 24 மணித்தியாலம் மஹரகம, கொட்டாவ, பன்னிபிட்டிய, ருக்மல்கம, பெலவத்தை, மத்தேகொட, ஹோமாகம, மீபே மற்றும் பாதுக்க ஆகிய பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் கிழக்கு நகர நீர் வழங்கல் வேலைத் திட்டத்தின் கீழ் நீர் குழாய் கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட உள்ள அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாகவே நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது.