பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு

(FASTNEWS|COLOMBO)- களுத்துறை மாவட்டத்தின் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் நிறைவுபெற்றுள்ளது.

இந்த போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் ஆராய மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களை அடுத்தே குறித்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

களுத்துறை நாகொட வைத்தியசாலையில், அமைச்சர் ராஜித்தவுக்கு எதிரான பொதுமனு ஒன்றில் கைச்சாத்து திரட்டும் போது, அமைச்சரின் ஆதரவாளர்கள் சிலர் அதற்கு எதிராக செயற்பட்டதுடன், அச்சுறுத்தும் வகையிலும் நடந்துக் கொண்டனர். இதற்கு எதிராகவே இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.