(FASTNEWS|COLOMBO)- காயம் காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளரான அன்ரூ ரஸல் உலகக் கிண்ண தொடரில் இருந்து விலகியுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்கு முன் ரஸலுக்கு முழங்கால் பகுதியில் காயம் ஏற்பட்டதனால் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை.
இந்நிலையில் அவர் உலகக் கிண்ண தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக சுனில் அம்ப்ரிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
31 வயதான அன்ரூ ரசல் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்த அளவு பிரகாசிக்காமல் போனாலும், பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்டு 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.