(FASTNEWS|COLOMBO)- கிளிநொச்சியில் இன்று(25) இடம்பெற்ற கோர விபத்தில் 6 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
——————————————–(update)
வாகன விபத்தில் 04 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு
(FASTNEWS|COLOMBO)- கிளிநொச்சி பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் 04 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன், 03 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இராணுவ கவச வாகனம் ஒன்று கொழும்பில் இருந்து யாழப்பாணம் நோக்கி சென்ற புகையிரதத்துடன் மோதியதில் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்து கூறியுள்ளார்.
விபத்தில் காயமடைந்த இராணுவ வீரர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்