‘ஆடை’ படம் – அமலாபாலிடம் வருத்தம் தெரிவித்த இயக்குனர்

(FASTGOSSIP|COLOMBO)- நடிகை அமலாபாலை வைத்து ‘ஆடை’ படத்தை இயக்கி இருக்கும் இயக்குனர் ரத்னகுமார், அவரிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தமிழ் படங்களில் எந்த நடிகையும் இதுபோல் துணிச்சலாக நடித்தது இல்லை. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் அமலாபால் ஆடை இல்லாமல் நடித்த காட்சிகள் இருந்தன.

இந்த டிரெய்லரை அதிகமானோர் பார்த்துள்ளனர். அமலாபாலின் துணிச்சலை வலைத்தளத்தில் பலரும் பாராட்டுகின்றனர்.

இந்த நிலையில் ஆடை டிரெய்லரில் இருந்த காட்சிகளை வைத்து அமலாபாலை கேலி செய்வதுபோல் வடிவேலுவை இணைத்து மீம்ஸ்களை உருவாக்கி உள்ளனர். இந்த மீம்ஸ்கள் வலைத் தளத்தில் வைரலாகி வருகின்றன. இதற்காக அமலாபாலிடம் ரத்னகுமார் வருத்தம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, “மீம்ஸ்களை உருவாக்குவது அவரவர் கருத்து சுதந்திரம். இப்போது எல்லா விஷயங்களையுமே வடிவேலு மீம்ஸ்களில் வெளியிடுகிறார்கள். அதற்கு ஆடை படமும் விதிவிலக்கு அல்ல. ஆடை படம் தனிமனித சுதந்திரத்தையும், சுயஒழுக்கத்தையும் பற்றி பேசுகிறது.” என்றார்.