மகேஷ் சேனாநாயக்க, ரிஷாட் பதியுதீனுக்கு பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அழைப்பு

(FASTNEWS|COLOMBO) -ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று(26) பிற்பகல் 2 மணியளவில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடவுள்ளது.

இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவிற்கு இன்று(26) அழைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் மற்றும் கைத்தொழில் அபிவிருத்தித் திணைக்களத்தின் பொது முகாமையாளர் ஆகியோரையும் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்க இன்று அழைக்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் தலைவர், பிரதி சபாநாயகர் ஆனந்தகுமாரசிறி குறிப்பிட்டுள்ளார்.

இன்று இடம்பெறவுள்ள சாட்சி விசாரணை வழமைபோன்று ஊடகங்களுக்கு வழங்கப்பட உள்ளதாக பிரதி சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.